யென் மதிப்பை உயர்த்த அமெரிக்காவுடன் கைகோர்த்த ஜப்பான்
ஜப்பானிய நாணயமான 'யென்' மதிப்பு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் சரிந்ததைத் தொடர்ந்து, அதன் மதிப்பை உயர்த்த ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
சந்தையில் யென் நாணயங்களை வாங்கும் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதாக இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
யென் நாணய மதிப்பு
ஜப்பானுக்கு உதவும் வகையிலும் உலகப் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க டொலருக்கு எதிரான யென் மதிப்பு 1.4 சதவீதம் வரை உயர்ந்து, 155.20 நிலையை எட்டியுள்ளது.

ஜப்பானில் அதிகரித்து வரும் இறக்குமதி விலைகள் மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் மேலும் இதுபோன்ற கூட்டு தலையீடுகளை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம் என்று ஜப்பான் நிதியமைச்சகம் மற்றும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கட் பெசென்ட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, அமெரிக்காவும் ஜப்பானும் இணைந்து இத்தகைய கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். அதேநேரம், யென் மதிப்பு உயர்ந்ததால் ஜப்பானின் பங்குச்சந்தையான 'நிக்கெய்' சரிவைச் சந்தித்துள்ளது.