சிட்னியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்திய பகுதியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது இன்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது.
முதலுதவி சிகிச்சை
சிட்னியின் மத்திய வணிகப் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்டிமோ என்ற பகுதியில் காலை 11 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்புப் படையினர், அங்கிருந்த 7 பேருக்கு முதலுதவி சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.

அவர்களில் பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் கட்டுமானப் பணி நடப்பெற்று வந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் சுவர்ப் பகுதி இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.