கிளிநொச்சி பாடசாலைக்கு ஜப்பான் நிதியுதவி
இலங்கையின் வடமாகாணத்தில் மீள் குடியமர்ந்த சிறுவர்களுக்கான பாடசாலை கட்டிட நிர்மாணிப்புக்காக ஜப்பான் அரசாங்கம் 88 .819 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை இன்று ஜப்பானிய உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, ஜப்பானிய துாதுவர் Mizukoshi Hideaki மற்றும் மனித அபிவிருத்தி பாதுகாப்பு திட்டத்தின் நிகழ்ச்சி பணிப்பாளர் ஜேசுராசா அமிர்தராஜ் ஆகியோர் கைச்சாத்திட்டது
இதன் மூலம் கிளிநொச்சி, கரைச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 2 பாடசாலையில் கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த பாடசாலையில் முதலாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையில் 248 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்தநிலையில் புதிய கட்டிடங்களில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான வகுப்பறைகளும் அமைக்கப்படவுள்ளன.
மனித அபிவிருத்தி பாதுகாப்பு திட்டம், வடக்கில் புனரடவாழ்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
