அவுஸ்ரேலியாவில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்குமாறு முன்மொழிவு
அவுஸ்திரேலியாவில் ஜனவரி மாதத்தை, தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் அண்ட்ரூ சார்ல்டன் (Andrew Charlton) முன்மொழிந்துள்ளார்.
இது, தமிழ் கலாசாரம் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான பங்களிப்பை மேம்படுத்தும் என்று அவர் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவர் முன்மொழிந்துள்ளார்.
தை பொங்கலை தமிழர்கள் கொண்டாடும் இந்த ஜனவரி மாதம் முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சமூகம்
அத்துடன், இந்த அங்கீகாரம், நெறிமுறைகள், ஆளுமை மற்றும் மனித விழுமியங்களுக்கு மக்களைத் தூண்டும் என்று கூறியுள்ள சார்ல்டன், திருக்குறள் போன்ற பழங்காலத் தமிழ்ப் பணிகளையும் இது அங்கீகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் பாரம்பரிய மாதம் உள்ளூர் வர்த்தகர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இலங்கைத் தமிழர்களுக்குப் பிறந்த நாடாளுமன்ற உறுப்பினரான மிச்சேல் ஆனந்தராஜா, இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.
இந்த நடவடிக்கை அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சமூகம் தங்கள் பாரம்பரியத்தை கொண்டாட உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |