ஜனக ரத்நாயக்கவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளைப் பார்வையிடத் தடை
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாகப் பார்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை குறித்த பதவியில் இருந்து அகற்றுவதற்கான பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அனுமதி மறுப்பு
குறித்த விவாதத்தை நேரடியாக பார்வையிட தனக்கும் தனது இரண்டு புதல்வர்களுக்கும் அனுமதியளிக்குமாறு ஜனக ரத்நாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எனினும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் அவருக்கு அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதன் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு எதிரான விவாதத்தை நாடாளுமன்றத்தின் யூடியூப் அலைவரிசை ஊடாக பார்வையிடதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |