ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணையை எதிர்க்க எதிரணிகள் கூட்டாகத் தீர்மானம்!
இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தர லங்கா சபாகய, டலஸ் அணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்டவை குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளன.
பதவி நீக்கும் பிரேரணை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரச பங்காளிக் கட்சிகள் ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.
இருப்பினும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடுகள் இதுவரையில் தெரியவரவில்லை.
இந்நிலையில் நாளை நடைபெறும் நாடாளுமன்றம் அமர்விலேயே ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |