ஜனக ரத்நாயவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜனக ரத்நாயக்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்ள சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
மின்சாரக் கட்டண அதிகாிப்பு தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சக்தி அமைச்சு என்பவற்றிற்கு இடையில் கடும் மோதல் போக்கு நிலவுகின்றது.
மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடந்த வருடமே மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்திருந்த போதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவராக இருந்த ஜனக ரத்நாயக்கவின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரை அதனை ஒத்தி வைக்க நேர்ந்தது.
நாடாளுமன்றத்தில் சிறப்புப் பிரேரணை
அதனையடுத்து வெளிநாடு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஜனக ரத்நாயக்கவிடம் இருந்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பதவி பறிக்கப்பட்டது.
தற்போது அவரை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்தும் அகற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் சிறப்புப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
எதிர்வரும் 24ம் திகதி இந்தப் பிரேரணை மீதான விவாதம், வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஜனக ரத்நாயகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
