பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்கும் பிரேரணை: அரச தரப்பு ஆயத்தம்
அரசாங்கத்தின் மின்துறைக் கொள்கை தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் நீண்டகாலமாக முரண்பட்டு வரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான பிரேரணையை முன்வைக்க அரசாங்கம்
தீர்மானித்துள்ளது.
எனினும், இந்த பிரேரணைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
பிரேரணை மீதான விவாதம்
நீடித்து வரும் அதிகார யுத்தம் காரணமாக அடுத்த வாரம் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணைக்கு நாடாளுமன்றம் வாக்களிக்கும் போது தீர்க்கமான கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது.
இந்தநிலையில் தாம் அடுத்த வாரம் தனது பதவியில் இருந்து தூக்கி எறியப்படலாம் என்ற போதிலும், கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் அதனை காட்டிக்கொள்ளவில்லை.
மாறாக அங்கும் அவர் அரசாங்கத்தின் அதிகாரத்தை மீண்டும் கடுமையாக விமர்சித்தார்.