யாழ். மண்ணில் வாழும் மக்களுக்கான புதிய வேலைத்திட்டத்தை வரவேற்கும் ஆளுநர்

Jaffna Ministry of Health Sri Lanka United States of America Nothern Province Nagalingam Vedanayagam
By Ashik Jun 26, 2026 11:01 AM GMT
Report

அவயவங்களை இழந்த எமது மக்களுக்கு ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் என்றும் இந்த நிறுவனம் தொடர்ந்து இயங்குவதற்கு உங்கள் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று(26.06.2026) நடைபெற்ற யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தில் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தின் மீள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பி்டுள்ளார்.

தூணுடன் கை - கால்கள் கட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய சடலம் - பின்னணியில் பாதாள உலகக்குழு தொடர்பு

தூணுடன் கை - கால்கள் கட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய சடலம் - பின்னணியில் பாதாள உலகக்குழு தொடர்பு

செயற்கை கால் பொருத்தும் நவீன முறை

யாழ்ப்பாணம் - சுண்டிக் குளி, கொழும்புத்துறை வீதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இந்தியாவின் ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் நவீன முறையை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தி, பயனாளிகளுக்கு அதனை முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட கட்டிடம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டதுடன், பயனாளிகளுக்கான செயற்கை கால்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

யாழ். மண்ணில் வாழும் மக்களுக்கான புதிய வேலைத்திட்டத்தை வரவேற்கும் ஆளுநர் | Jaipur Blessing Our People Governor Vedhanayakan

இந்தப் புதிய செயற்றிட்டமானது, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனங்கள் மற்றும் லண்டன் ஸ்கூல் ஒவ் கொமர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் அண்ட்ராடி ஆகியோரின் நிதியுதவி மற்றும் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர், ஜெய்ப்பூர் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக எமது மண்ணில் அளப்பரிய சேவையாற்றி வருவதாகவும், போரால் எமது மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு, அவயவங்களை இழந்திருந்த நெருக்கடியான காலகட்டத்தில், அவர்களுக்கு அருமருந்தாக அமைந்தது இந்த நிறுவனமேயாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிறுவனம் எமது மண்ணில் இயங்கி இருக்காவிட்டால், எமது மக்களில் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

3 நாட்கள் கட்டமைப்புகளை செயலிழக்கச் செய்யவும்! விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

3 நாட்கள் கட்டமைப்புகளை செயலிழக்கச் செய்யவும்! விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

மக்களுக்கான இலவச சேவை

இந்த நிறுவனத்துக்கு போதியளவான அரச உதவிகள் கிடைக்க பெறவில்லை எனவும், தான் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளராக பணியாற்றிய காலப்பகுதியில், அப்போது அமைச்சின் செயலாளராக இருந்த சிவஞானசோதியின் ஒத்துழைப்புடன் சில உதவிகளைப் பெற்றுக் கொடுத்திருந்ததாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.

இன்றும் எமது மண்ணில் விபத்துக்களாலும், நீரிழிவு போன்ற நோய்களாலும் பலர் தமது அவயவங்களை இழக்கும் நிலையில், அவர்களுக்கு இந்த நிறுவனத்தின் சேவை அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மண்ணில் வாழும் மக்களுக்கான புதிய வேலைத்திட்டத்தை வரவேற்கும் ஆளுநர் | Jaipur Blessing Our People Governor Vedhanayakan

மேலும், எமது மக்களுக்கு பொருத்தமான வகையிலும், உயர் தரத்திலும், இலகுவாக அணுகக்கூடிய முறையிலும் இங்கு செயற்கை அவயவங்கள் வழங்கப்படுகின்றமை விசேட அம்சமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைத் தலைவர் கோசலை மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட மேலதிகச் செயலாளர் ஜெயகரன், யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் பிரதேச செயலாளர்கள், சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களான மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Gallery

கிழக்கு மாகாண காணி பிரச்சினைகளுக்கு விசேட குழு நியமனம்

கிழக்கு மாகாண காணி பிரச்சினைகளுக்கு விசேட குழு நியமனம்

மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US