தூணுடன் கை - கால்கள் கட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய சடலம் - பின்னணியில் பாதாள உலகக்குழு தொடர்பு
காலி - ஜின் ஆற்றுப்பகுதியில் வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட சடலம் "பொடி லசி" எனப்படும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரின் நெருங்கிய சகா ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (23) காலி, பொத்தல பகுதியில் உள்ள வக்வெல்ல பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது.
சடலம் அடையாளம்
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், இறந்தவரின் முகம் சிதைக்கப்பட்டிருந்ததும், அவரது கைகள், கால்கள் கொன்கிரீட் தூணுடன் ஒன்றாக இறுக கட்டப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பபில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தற்போது சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, மேலதிக பரிசோதனைகளுக்காக சடலம் காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri