3 நாட்கள் கட்டமைப்புகளை செயலிழக்கச் செய்யவும்! விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு
பொது மக்களுக்கு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி நாளைய தினம் (27.06.2026) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை, கூரைகளின் மீது பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளைக் கொண்ட நுகர்வோர், அவற்றைச் செயலிழக்கச் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மை
மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (26) கருத்து தெரிவித்த போதே பிரதி அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், இந்த மின் கட்டமைப்புகளைச் நிறுத்தி வைப்பதன் மூலம், கடந்த வெசாக் பண்டிகை தினத்தில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தவிர்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.