யாழ்.வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் தேவை..! விடுக்கப்பட்ட வேண்டுகோள்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு தகுதியான தாதியும் நிரந்தர வைத்தியரும் தேவை என கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்துள்ளார்.
இன்று(30.01.2026) நடைபெற்ற சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாக பணி நியமனம்
புனர்வாழ்வு அமைச்சினால் யாழ்ப்பாணம் மற்றும் வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு கட்டில்கள் பெற்றுக் கொடுக்கப்பட்ட போதிலும் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் கட்டில்கள் தேவைக்கு அதிகமாக உள்ளது.
ஆகவே இந்த பிரச்சினைகளை அனைத்தையும் கருத்திற் கொண்டு இதற்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி கருத்து தெரிவிக்கையில், இரண்டு மருத்துவ உத்தியோகத்தருக்கு மாத்திரமே பணி நிலை காணப்படுகிறது.
இரவில் மருத்துவர் கடமையில் இருக்க வேண்டும் என்றால் 4 மருத்துவ உத்தியோகத்தராவது பணியில் இருக்க வேண்டும். இம்முறை மருத்துவ உத்தியோகத்தர் மற்றும் தாதியர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தரப்புக்கு அனுப்பியுள்ளோம்.
நாட்டின் நிலைமை காரணமாக கடந்த சில வருடங்களாக பணி நியமனம் செய்யப்படவில்லை. அதனாலேயே இந்த நிலை உருவாகியுள்ளது. எனவே எங்களுக்கு அனுமதி கிடைத்ததும் இந்த விடயத்தை சீர் செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri