நினைவேந்தலை குழப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம்: பொன்மாஸ்டர்

Jaffna
By Kajinthan Sep 20, 2022 07:32 PM GMT
Report

“திடீர் நினைவேந்தல் கட்டமைப்புக்கள் மூலம் தியாக தீபத்தின் நினைவேந்தலை குழப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம்” என தியாக திலீபனின் எற்பாட்டுக்குழுவின் தலைவர் முன்னாள் மூத்த போராளி பொன்மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன், இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  நினைவேந்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்.மாநகரசபை

”இன்று இந்த புனிதமான இடத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல் சம்மந்தமாக ஊடக சந்திப்பினை நடத்தும் நிலைக்கு யாழ்.மாநகரசபை எம்மைத் தள்ளியுள்ளது.

ஒரு மெல்லிய நெருப்பிற்குள் நின்றே எமது தியாகச்செம்மல்களின் நினைவேந்தல்களை தற்போதுவரை நடத்திக்கொண்டு வருகின்றோம்.

நினைவேந்தலை குழப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம்: பொன்மாஸ்டர் | Jaffna Thiyaki Thileepan Remembrancesl

இன்று ழுழு நெருப்பிற்குள் நின்று எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தேசியத் தலைவரின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாகவிருந்து ஒற்றையாட்சியின் கீழான செயற்பாட்டை எதிர்த்து போராடியே தியாகச் செல்வங்கள் மடிந்தன.

அவர்களின் தியாகங்களை சரியாக வழிநடத்த எம்மாலான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த அடிப்படையில், கடந்த ஆறு வருடங்களாக தியாக தீபத்தின் நினைவேந்தலை நடத்திவரும் நினைவேந்தல் ஏற்பட்டுக்குழுவோடு எந்தவித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது. தியாக தீபத்தின் நினைவேந்தலை குழப்புவதற்கான திட்டமிட்ட சதி முயற்சியினை யாழ். மாநகர சபை முன்னெடுத்துள்ளது.

ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள நினைவேந்தல் கட்டமைப்பில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவுகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்தே தியாக தீபத்தின் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய முயற்சி 

நினைவேந்தலை குழப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம்: பொன்மாஸ்டர் | Jaffna Thiyaki Thileepan Remembrancesl

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தியாக தீபத்தின் நினைவேந்தலினைக் குழப்பி மக்கள் மயப்படுத்தப்பட்டு வரும் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச்செய்வதே புதிதாக உருவாக்கப்பட்ட திடீர் நினைவேந்தல் கட்டமைப்புக்களின் நோக்கமாகும்.

நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவால் நினைவேந்தல் ஆரம்பித்து ஐந்து நாட்கள் கடந்த நிலையில் இன்று புதிதாக தோன்றும் திடீர் நினைவேந்தல் கட்டமைப்புக்கள் எமது போராட்டத்தின் தியாகங்களுக்கு செய்யும் துரோக நடவடிக்கையாகும்.

விடுதலை உணர்வுகள் மக்கள் மத்தியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற சதித்திட்டத்தினை இந்த கட்டமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும், கடந்த வெள்ளியன்று மாநகரசபை முதல்வரினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த திடீர் நினைவேந்தல் கட்டமைப்பிற்கான கூட்டத்தில் பங்குபற்றியிருந்த முன்னாள் போராளி செழியன், தியாக தீபத்தின் நினைவேந்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியையும் இராணுவத்தினரையும் கூட இணைத்துக்கொள்வோம் என்றவொரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்தவேளையில் அங்கு கூடியிருந்த ஒரு முன்னாள் போராளியைத்தவிர வேறு எவருமே அவருடைய கருத்திற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால் அந்த போராளியைத் தவிர்த்தே ஏழு பேர் கொண்ட கட்டமைப்பானது உருவாக்கப்பட்டிருந்தது.

இப்படியானவர்கள் தியாக தீபத்தின் நினைவேந்தலை பொறுப்பெடுப்பதென்பது நினைவேந்தலின் புனிதத்தன்மையினை மாசுபடுத்துவதாகவே அமையும் என்பதனை நான் தெட்டத்தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இதுவரை காலமும் எந்தவொரு குழப்பங்களுமின்றி நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது.

அவ்வாறு ஏதும் குழப்பங்கள் இருந்தால் கூட கடந்த வருடம் நினைவேந்தல் நிறைவுற்று ஒரு வருட காலம் இருந்த நிலையில் அதனை ஏற்பாட்டுக்குழுவிற்கு அறியப்படுத்தியிருக்கலாம்.

அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது இன்று இந்த திடீர் கட்டமைப்பினை உருவாக்கியிருப்பதென்பது, மக்களைக் குழப்பத்திற்கு உட்படுத்தி, தியாக வரலாறுகளை மழுங்கடிக்கச்செய்யும் திட்டமிட்ட சதியே என்பது புலனாகின்றது.

திடீர் நினைவேந்தல் கட்டமைப்பு

குறித்த திடீர் நினைவேந்தல் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்ட ஒருவர் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கைதிகளுடைய போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார்.

எனினும் போராட்டக்காரருக்கு போராட்டத்தின் போதும் போராட்டத்திற்கு பின்னரும் எந்த வழியிலும் அவர்களுக்கான உதவிகளை வழங்காமல் போராட்டத்திற்கே தாமதமாகவே வருகை தந்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் குறித்த உறவுகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்ததோட போராட்டத்தில் நாமும் பங்கெடுத்திருந்தோம்.

இவ்வாறாக மக்களை அழைத்து நடுவீதியில் விட்டுச்சென்றவரால் எவ்வாறு இந்த நினைவேந்தலை நேர்த்தியாகச் செய்து விட முடியும். மேலும், குறித்த இந்த திடீர் கட்டமைப்பினைச் சார்ந்தவர்கள், தாயகத்தில் எமது மக்கள் சார்ந்து செயற்படுத்த வேண்டிய ஏராளமான விடயங்கள் காணப்படுகின்றது.

அவற்றில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என நான் அவர்களுக்கு கூறிக்கொள்கின்றேன். தியாக தீபத்தின் ஐந்து அம்சக்கோரிக்கைகளுள் ஒன்றான நிலஆக்கிரமிப்பு குருந்தூர் மலையில் சிங்கள பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நினைவேந்தலை குழப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம்: பொன்மாஸ்டர் | Jaffna Thiyaki Thileepan Remembrancesl

எனவே இங்கு நினைவேந்தலினைக் குழப்பாமல் குருந்தூர் மலைக்குச்சென்று தியாக தீபத்தின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கின்றேன்.

எது எவ்வாறாயினும் வழமை போலவே தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் முன்னெடுக்கப்படும் என்பதோடு அதனைக் குழப்பும் வகையில் எந்த தரப்பு செயற்பட்டாலும் நாம் அவற்றுக்கெதிராக குரல் எழுப்புவோம் ” என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US