தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின் ஆறாவது நாள் நிகழ்வு இன்று (20.09.2022) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான நினைவுத் தூபியில் நடைபெற்றுள்ளது.
இந்த நினைவேந்தலின் போது, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு முன்னால் ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். இதன்போது ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடரும் நினைவேந்தல் நிகழ்வு

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதன்போது கலந்துகொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக எதிர்வரும் 26ஆம் திகதி வரை மாணவர்களால் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam