தியாக தீபம் திலீபனின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் (Photos)
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின் ஐந்தாவது நாள் நிகழ்வு இன்று (19.09.2022) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான நினைவுத் தூபியில் நடைபெற்றுள்ளது.
இந்த நினைவேந்தலின் போது, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு முன்னால் ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதன்போது கலந்துகொண்டுள்ளனர்.

உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு
தியாகதீபம் திலீபனின் ஐந்தாவது நாள் நினைவேந்தலானது இன்று அனைத்து மாணவர்களாலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக எதிர்வரும் 26ஆம் திகதி வரை மாணவர்களால் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri