பௌத்த மயமாகும் குருந்தூர் மலை:வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்(Video)
குருந்தூர் மலை தொடர்பான வழக்கு நீதிமன்றில் உள்ள நிலையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் குருந்தூர் மலை காணியை விகாரைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(20.09.2022) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“இந்த விடயம் தொடர்பில் நானும்,நாடளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்சும் இன்று காலை துறை சார்ந்த அமைச்சரை சந்தித்து கதைத்தோம்.
இந்த குருந்தூர் மலை காணி அளவீடு தொடர்பில் அமைச்சர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். பின்னர் தொலைபேசி ஊடாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்துக்கு அளவீட்டு பணிகளை நிறுத்துமாறு கூறினார். நாளை தான் தெரியும் அமைச்சரின் பணிப்புரைக்கு என்ன நடக்க போகிறது.
இந்த நிலையில் தேசிய சபை ஒன்றை அமைப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
| குருந்தூர் மலை தொடர்பில் அமைச்சரிடமிருந்து சென்ற உத்தரவு (Photos) |
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan