பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள யாழ். கலாசார மண்டபம்
இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு, "யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என தற்போது பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும் இலங்கைக்கான இந்திய தூதுவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் அக்கட்டத்திற்கு "திருவள்ளுவர் கலாசார மையம்" என பெயர் சூட்டி பெயர் பலகையை திறந்து வைத்தனர்.
பெயர் மாற்றம்
"யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்" என்ற பெயர் மாற்றப்பட்டு, "திருவள்ளுவர் கலாசார மையம்" என பெயர் சூட்டியமைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் , கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்றையதினம்(24) வெள்ளிக்கிழமை குறித்த கட்டடத்தில், " யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam