கோடிக்கணக்கான அமெரிக்க டொலர் பெறுமதியுடைய மாணிக்கக்கல்! இலங்கை தொழிலதிபருக்கு அச்சுறுத்தல்
பிரபல தொழிலதிபர் துஷார பெரேரா, 2017ஆம் ஆண்டு தனக்குக் கிடைத்த ஒரு சிறப்பு நீல சபையர் (மாணிக்ககல்) தொடர்பாக அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும், அதன் மதிப்பு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மாணிக்கக்கல் கொருண்டம் குடும்பத்திலிருந்து வந்த 350 கரட் நீல சபையர் ஆகும்.
அமெரிக்க மற்றும் ஜெர்மனியில் இருந்து வர்த்தகர்கள் இதை வாங்க ஆர்வமாக இருந்தபோதிலும், சட்ட மற்றும் நிதி கட்டுப்பாடுகள் காரணமாக அவரால் இலங்கைக்கு பணத்தை கொண்டு வர முடியவில்லை.
150 மில்லியன் இலஞ்சம்
எனவே, கல்லை விற்க அவர் அரசாங்க அமைச்சர்களிடம் உதவி கேட்க வேண்டியிருந்தது.
2017 முதல், இலங்கையின் இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையம் கரடுமுரடான கற்களுக்கான மதிப்பீடுகளை வழங்காததால், இந்த இரத்தினக் கல்லை வெளிநாடுகளுக்கு விற்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.
அத்துடன், ஏற்றுமதி விதிகள், விலையுயர்ந்த கற்களை மட்டுமே வெளிநாடுகளுக்கு விற்க அனுமதிக்கின்றன.
இந்த நேரத்தில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் விற்பனைக்கு மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார், ஆனால் 150 மில்லியன் இலஞ்சம் கோரினார் என்று தொழிலதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரும் உதவிக்கு ஈடாக கல்லின் மதிப்பில் ஒரு பங்கைக் கேட்டிருந்தார்.
அரசியல் அச்சுறுத்தல்கள்
தொழிலதிபர் துஷாராவின் அறக்கட்டளையின் துணைத் தலைவர் பதவியை அவருக்கு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
இந்தநிலையில், 2018 ஆம் ஆண்டு தாம் கடத்தப்பட்டு, கப்பம் வாங்குவதற்காக அவிசாவெல்லாவின் புவக்பிட்டி பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக துஷாரா கூறியுள்ளார்.
இந்த அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் துஷாரா கூறியுள்ளார்.
இதேவேளை, ஒரு கொள்வனவாளரை கண்டுபிடித்து இரத்தினக் கல்லுக்கு பணம் பெற்றாலும், இலங்கையின் சட்டங்களால், பணத்தை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதில் சட்ட சவால்களையும் எதிர்கொள்வதாக துஷார தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் பேசி தீர்வு காணத் தயாராக இருப்பதாக துஷார கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |