யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்
வடக்கின் முன்னணி அரச வைத்தியசாலையான யாழ். போதனா வைத்தியசாலை மீதான குற்றச்சாட்டுக்கள் முற்றுப்பெறாத ஒன்றாக மாறியுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகத்தினரின் அசமந்த போக்கும், பாராமுகமும் பல்வேறு நடவடிக்கைகளை சமூகத்திற்கு வெளிப்படுத்தாது இருட்டடிப்பு செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்களினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
சமூக ஆர்வலர்கள் மாத்திரமல்லாது, பல்வேறு நோயாளர்களினாலும் வைத்தியசாலை நிர்வாகத்தினரின் நடவடிக்கைகள் விரும்பத்தகாத வகையில் அமையப்பெற்றுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் வைத்தியசாலையில் கை முறிவிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியொருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர் ஒருவரின் நடவடிக்கைகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தன்னுடன் தங்கியிருந்த நோயாளி ஒருவரிடம் குறித்த தாதி, ''எதற்காக வந்துள்ளாய், நீ சாகத்தான் போகின்றாய் என்ற கடும் வார்த்தைகளை பிரயோகித்துள்ளாதாக கவலை வெளியிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக முற்றுப்பெறாது தொடரும் யாழ். போதனாவின் குற்றசாட்டுக்களுக்கு தீர்வென்பது விரைவில் கிடைக்கவேண்டும் என வலியுறுத்தும் ஒரு ஆர்வளரின் ஆவணபதிவு கீழே...
தொடர்புடைய செய்திகள்

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
