பொழுதுபோக்கு மையமாக மாற்றப்பட்ட யாழ். சங்கிலியன் பூங்கா
யாழ்ப்பாணம் முத்திரை சந்தியில் உள்ள சங்கிலியன் பூங்கா யாழ். மாநகர சபையினால் பொழுதுபோக்கு மையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்குறிய இடமாக நேற்று (01.01.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொழுது போக்கு மையம்
மேற்படி பூங்காவின் நீண்ட கால அபிவிருத்தி பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தற்காலிக பொழுது போக்கு மையமாக பயன்படுத்த கூடியவாறு மாற்றப்பட்டுள்ளது.
அத்துடன் படிப்படியாக இப் பூங்காவினை மேம்படுத்த உள்ளதாகவும் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் குறித்த பொழுதுபோக்கு மையத்தினை தற்போது இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் காலப்போக்கில் கட்டணங்கள் தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் யாழ். மாநகரசபையினரால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri