மட்டக்களப்பு மாவட்டத்தில் கன மழை: வாகரை பிரதேச செயலக பிரிவில் இடம்பெயர்வு (Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் தாழ் நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இன்று (01.01.2024) பகல் 2 மணியின் பின்னர் கன மழை பெய்து வருவதால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல குளங்களின் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளதுடன் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வயல் நிலங்கள் பல வெள்ளக்காடாக காட்சியளிப்பதோடு அப்பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மகாவலி கங்கை வெள்ளப்பெருக்கு காரணமாக கோறளை பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர் பிரிவான கதிரவெளி பிரிவின் கல்லரிப்பு வெருகல் பகுதியில் பாரிய வெள்ளம் கல்லறைப்பிலிருந்து 37 குடும்பங்கள் கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு இடைத்தங்கல் முகாமாக இடம் மாற்றப்பட்டுள்ளது
போக்குவரத்து தடை
கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிண்ணையடி தொடக்கம் பிரம்படித்தீவு வரையிலான பிரதேசத்துக்கான போக்குவரத்தும், செங்கலடி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஈரலக்குளம், மயிலவெட்டுவான் மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி வரையான பிரதேசங்களுக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், கதிரவெளி ஜூனியர் பாடசாலையில் 30 குடும்பங்களும், கல்லரிப்பு முன்பள்ளியில் 9 குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |