யாழில் திருட்டு சம்பவம்: தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரம்
யாழ்பாணத்தில் 13 பவுண் நகை மற்றும் ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்கள் என்பவற்றை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று(26.09.2023) இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருட்டு சம்பவம்
இதன் போது வீட்டின் உரிமையாளர் மதியம் பாடசாலையில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர சென்ற சமயம், வீட்டினுள் நுழைந்த திருடர்கள் அங்கு இருந்த 13 பவுண் தங்க நகைகளையும் , ஒரு தொகை வெளிநாட்டு பணத்தையும் திருடி சென்றுள்ளதாக உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




