யாழ். மாவட்ட பதிவாளர் நாயக திணைக்கள ஒரு நாள் சேவைகள் நிறுத்தம்

Jaffna Northern Province of Sri Lanka
By Theepan May 28, 2024 10:11 PM GMT
Report

யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் திணைக்களத்தில் காணிகளுக்கான தோம்பு மற்றும் உறுதி பிரதிகளை வழங்கும் ஒருநாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

விற்பனைக்கு பிந்திய சேவை

இயந்திரங்களை விற்பனை செய்த நிறுவனங்களே விற்பனைக்கு பிந்திய சேவைகளை வழங்குவதானல், அவர்களே பழுதுகளை சரி செய்ய ஊழியர்களை அனுப்பி வைப்பார்கள்.

இயந்திரங்கள் பழுந்தடைந்தமை தொடர்பில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , அவர்கள் தமது ஊழியர்களை அனுப்பாதமையால் ,இயந்திரங்கள் திருத்தப்படாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்ராஹீம் ரைசி மரணமடைந்த பின் அயல்நாட்டில் தரையிறங்கிய அமெரிக்காவின் இராணுவ விமானம்

இப்ராஹீம் ரைசி மரணமடைந்த பின் அயல்நாட்டில் தரையிறங்கிய அமெரிக்காவின் இராணுவ விமானம்

மக்களுக்கு வீண் அலைச்சல்

தூர இடங்களில் இருந்து வருபவர்கள் , அவசர தேவை உடையவர்கள் ஒருநாள் சேவையை நாடுகிறார்கள். ஒருநாள் சேவைக்கான கட்டணங்கள் அதிகமாகும். தோம்பு ஒன்றினை ஒருநாள் சேவையில் பெற 200 ரூபாயும் சாதாரண சேவையில் பெறுவதற்கு 120 ரூபாயும் அறவிடப்படுகிறது.

அதேபோன்று உறுதி பிரதி ஒன்றினை ஒருநாள் சேவையில் பெற ஆயிரம் ரூபாயும் சாதாரண சேவையில் பெற 600 ரூபாயும் அறவிடப்படுகிறது. இவ்வாறான நிலையில் அவசர தேவைக்காக, காலையில் ஒருநாள் சேவைக்கு விண்ணப்பித்து, மதியத்திற்கு பின்னர் அதனை பெற செல்லும் போது , இயந்திரம் பழுந்தடைந்து விட்டது என உத்தியோகத்தர்கள் கூறுவதால், சேவையை பெற சென்றவருக்கு வீண் அலைச்சலுடன் பணமும் நட்டமடைகிறது.

யாழ். மாவட்ட பதிவாளர் நாயக திணைக்கள ஒரு நாள் சேவைகள் நிறுத்தம் | Jaffna Registrar General Department Services Stop

ஒருநாள் சேவையை பெறவே அதிக கட்டணம் செலுத்தும் நிலையில் மறுநாள் அவற்றை வழங்குவதால் , அது சாதாரண சேவையாகவே கருதப்படும். ஆனால் ஒருநாள் சேவைக்கு என வழங்கிய பணத்தினை மீள கையளிக்கும் நிலையும் இல்லை.

இதனால் சேவைகளை பெற செல்லும் மக்கள் மாத்திரமின்றி சட்டத்தரணிகள் மற்றும் நொத்தாரிசுகள் கூட சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பில் யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் கவனம் செலுத்தி , பதிவாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு குறைப்பாடுகள் சிலவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேவை பெற வந்தவர்கள் கோரினார்கள்.

கனடாவில் உணவகம் ஒன்றுக்குள் தமிழ் இளைஞனால் பெண்களுக்கு நேர்ந்த கதி

கனடாவில் உணவகம் ஒன்றுக்குள் தமிழ் இளைஞனால் பெண்களுக்கு நேர்ந்த கதி

உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை

அதேவேளை யாழ்.மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்படப்படாமல் உள்ளமையால் , திணைக்கள உத்தியோகத்தர்கள் கடும் வேலை சுமைகளுடன் கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெற்றிடங்களை நிரப்புமாறு பதிவாளர் நாயக திணைக்களத்திடம் பல தடவைகள் கோரியும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அத்துடன் சில நேரங்களில் காகிததாதிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்வதில் கூட உத்தியோகத்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மாவட்ட பதிவாளர் நாயக திணைக்கள ஒரு நாள் சேவைகள் நிறுத்தம் | Jaffna Registrar General Department Services Stop

மழை காலங்களில் கீழ் தளத்தில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு. யாழ்.மாவட்ட பதிவாளர் திணைக்களம் ஊடாக நாளாந்தம் சுமார் 3 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தினை பதிவாளர் திணைக்களம் பெற்றுக்கொள்கின்ற போதிலும் , மாவட்ட திணைக்களத்தை வினைத்திறனுடன் மக்களுக்கு சேவை செய்வதற்குரிய வசதிகளை செய்து கொடுக்காது.

தலைமை அலுவலகம் அசண்டையீனமாக காணப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

கொழும்பில் அலுவலகம் நடத்திய இந்தியர்கள் கைது

கொழும்பில் அலுவலகம் நடத்திய இந்தியர்கள் கைது

போராட்டம் நடத்த முனைப்பு 

யாழ்.மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் காணப்படும் குறைபாடுகள், வள பற்றாக்குறைகள் தொடர்பில் தலைமை அலுவலகமான பதிவாளர் திணைக்களத்திற்கு பல தடவைகள் முறையிட்டும் எந்த பயனும் இல்லாத நிலையில், திணைக்களத்தின் 160 ஆவது ஆண்டினை முன்னிட்டு , எதிர்வரும் ஜூன் மாதம் 06ஆம் திகதி பதிவாளர் நாயகமான டபிள்யு.ஆர்.ஏ.என்.எஸ். விஜயசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் அவரிடம் நேரில் கோரிக்கைகளை முன் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட பதிவாளர் நாயக திணைக்கள ஒரு நாள் சேவைகள் நிறுத்தம் | Jaffna Registrar General Department Services Stop

தமது கோரிக்கைகளை நேரில் முன் வைத்த பின்னர், ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை விடயத்தில் மனித உரிமைகளுக்கே முன்னுரிமை : ஆன் மேரி ட்ரெவெல்யன்

இலங்கை விடயத்தில் மனித உரிமைகளுக்கே முன்னுரிமை : ஆன் மேரி ட்ரெவெல்யன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US