ஷிரந்தி ராஜபக்ஷவின் கண் தொடர்பில் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ நீதிமன்ற வளாகத்திற்கு கடற்கொள்ளையர்களின் பாரம்பரிய உருவத்தை போன்று ஒரு கண்ணை மூடிய நிலையில் வருகை தந்ததாக ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
சிங்கப்பூரில் வைத்திய சிகிச்சை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சிரிலிய சவிய கணக்குத் தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை சிங்கப்பூரில் வைத்திய சிகிச்சை பெற்று இலங்கைக்கு திரும்பிய நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
கண் தொடர்பான சிகிச்சைக்காகவே அவர் சிங்கப்பூர் சென்றிருந்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்றைய தினம் நீதிமன்ற வளாகத்தில் அவர் கண்ணில் திடீரென புதிய பாதிப்பு ஏற்பட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளதாக கூறியுள்ளார்.
கடற்கொள்ளையர்களின் பாரம்பரிய உருவத்தைப் போன்று ஒரு கண்ணை மூடிய நிலையில் அவர் காணப்பட்டதாகவும், இது ஒரு குறியீட்டு அர்த்தத்தையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, ஷிரந்தி ராஜபக்ஷ முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, உண்மை நிலை மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan