ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சிக்கு பிணை
புதிய இணைப்பு
வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அத்துருகிரிய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய பொலிஸாரால் இன்று காலை (8) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு அத்துருகிரிய, பனாகொட பகுதியில் வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
you may like this video