பலத்த பாதுகாப்பில் ஷிரந்தி ராஜபக்ச! வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போதைய நிலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு சுமார் 7 மணியளவில் அவர் நீதிமன்றத்திலிருந்து வெலிக்கடை பெண்கள் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக சிறைத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான இடத்தில் தடுத்துவைக்க ஏற்பாடுகள்
அதன்படி, சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் அவர் தடுத்து வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

தற்போது ஷிரந்தி ராஜபக்ச மேலும் சுமார் 60 பெண் கைதிகள் வைக்கப்பட்டுள்ள ஒரு பாதுகாப்பு வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், அவர் இன்று மருத்துவப் பரிசோதனைக்காக கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளார்.
அரசுக்குச் சொந்தமான வங்கியொன்றில் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா பணத்தைச் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டது.
இதன்போது ஷிரந்தி ராஜபக்சவிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா பிணை மனுவை முன்வைத்து அவரது உடல்நிலை குறித்து பல தகவல்களை முன்வைத்திருந்தார்.
வைத்தியசாலையில் முன்னிலைபடுத்த நடவடிக்கை
ஷிரந்தி ராஜபக்ச 2023 முதல் 'Sleep Apnea' நோய்க்காகச் சிகிச்சை பெறுகிறார். தலையில் 3 கட்டிகள் உள்ளன. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு எனப் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது கட்சிக்காரர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

73 வயதான இவர், 2019 முதல் இதய நோயாளி, மூளை மற்றும் முதுகெலும்பு கோளாறுகளும் உள்ளன. இவரை விளக்கமறியலில் வைப்பது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்" என வாதாடினார்.
அதேவேளை, வைத்திய சிகிச்சைக்காக சந்தேகநபரை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் முன்னிலைபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்குத் தேவையான வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன குறிப்பிட்டுள்ளார்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam