உதைபந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த யாழ். வீரர்கள்!

Jaffna Sri Lankan Peoples Sports
By Rakesh Apr 07, 2026 10:41 AM GMT
Report

இலங்கை உதைப்பந்தாட்ட வரலாற்றில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கழகம் ஒன்று தேசிய அளவில் சம்பியன் பட்டம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய 'சம்பியன்ஸ் கிண்ண' நொக்-அவுட் உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில், யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் கழகம், பலம் வாய்ந்த சோண்டர்ஸ் கழகத்தை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளது.

ஈரான் கடற்பரப்பில் பாரிய கப்பல் மீது தாக்குதல்! வெளியான பரபரப்பு தகவல்

ஈரான் கடற்பரப்பில் பாரிய கப்பல் மீது தாக்குதல்! வெளியான பரபரப்பு தகவல்

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் சர்வதேச உதைபந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இலங்கையின் பாரம்பரியமிக்க சோண்டர்ஸ் கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் களமிறங்கியது.

3ஆவது நிமிடங்களில் முதல் பந்து

ஆட்டம் தொடங்கிய 3ஆவது நிமிடத்திலேயே சென். மேரிஸ் வீரர் டஞ்சுமா கம்பாரி, மின்னல் வேகத்தில் ஒரு கோலை அடித்துத் தனது அணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலை தேடித்தந்தார்.

உதைபந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த யாழ். வீரர்கள்! | Jaffna Players Achieved In Football Competition

இருப்பினும், அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே சோண்டர்ஸ் வீரர் க்ளோவிஸ் ப்ராங்க் ஒரு பதில் கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். ஆட்டத்தின் எஞ்சிய பகுதியில் இரு அணிகளும் வெற்றி கோலை அடிக்க கடுமையாகப் போராடிய போதிலும், இரு தரப்பு கோல்காப்பாளர்களும் மிகத் திறமையாகச் செயற்பட்டு கோல் முயற்சிகளை முறியடித்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் ஆட்டம் 1 - 1 எனச் சமநிலையில் முடிந்ததை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனல்டி அவுட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

வெற்றிக்கான காரணம்

இதன்போது சென். மேரிஸ் கழகத்தின் கோல்காப்பாளர் எஸ். ஆர்னிகன் ஒரு கதாநாயகனாகத் திகழ்ந்தார். சோண்டர்ஸ் கழகம் உதைத்த மூன்று பெனல்டிகளைத் தனது அசாத்திய திறமையால் தடுத்து நிறுத்திய அவர், தாமே ஒரு பெனல்டியை கோலாக மாற்றி 3-1 என்ற கணக்கில் தனது அணிக்கு வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் பிரதான கழகங்களுக்கு இடையிலான தொடர் ஒன்றில் சம்பியனான முதலாவது வடக்கு, கிழக்கு அணி என்ற வரலாற்றுச் சாதனையை நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் படைத்துள்ளது.

உதைபந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த யாழ். வீரர்கள்! | Jaffna Players Achieved In Football Competition

அத்துடன், பலம் வாய்ந்த சோண்டர்ஸ் கழகத்துடன் மோதிய லீக் மற்றும் நொக் - அவுட் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடையாத முதல் வடக்கு மாகாண அணி என்ற பெருமையையும் இக்கழகம் பெற்றுக்கொண்டது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலக்கரட்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

சம்பியன் பட்டம் வென்ற சென். மேரிஸ் கழகத்திற்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடம் பிடித்த சோண்டர்ஸ் கழகத்திற்கு 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டன.

மேலும், சோண்டர்ஸ் வீரர் ரொஜர் பிலிப்பே அதிக கோல்களை அடித்து 'தங்கப் பாதனி' விருதையும், விஜயகுமார் அபிஷான் வளர்ந்து வரும் வீரருக்கான 'தங்கப் பந்து' விருதையும், மொஹமத் லுத்பி சிறந்த கோல்காப்பாளருக்கான 'தங்கக் கையுறை' விருதையும் பெற்றுக்கொண்டனர். இந்த வெற்றியானது இலங்கை கால்பந்தாட்டத் துறையில் வடக்கு மாகாண வீரர்களின் அபாரத் திறமையை சர்வதேச தரத்திற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.

உதைபந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த யாழ். வீரர்கள்! | Jaffna Players Achieved In Football Competition

உதைபந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த யாழ். வீரர்கள்! | Jaffna Players Achieved In Football Competition

ஹட்டன் வனப்பகுதியில் சிக்கிய வெளிநாட்டு யுவதி: விரைந்து செயல்பட்ட பொலிஸார்

ஹட்டன் வனப்பகுதியில் சிக்கிய வெளிநாட்டு யுவதி: விரைந்து செயல்பட்ட பொலிஸார்

உலக சந்தையில் தங்க விலையில் சடுதியான மாற்றம் - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்

உலக சந்தையில் தங்க விலையில் சடுதியான மாற்றம் - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்


மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US