ஹட்டன் வனப்பகுதியில் சிக்கிய வெளிநாட்டு யுவதி: விரைந்து செயல்பட்ட பொலிஸார்

Sri Lanka Police Sri Lanka Tourism Sri Lankan Peoples Sri Lanka Government Hatton
By Thiva Apr 07, 2026 05:20 AM GMT
Report

ஹட்டன் - சிங்கமலை வனப்பகுதியில் உள்ள ஒரு மலை உச்சியில் கீழே இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு யுவதி ஒருவரை பொலிஸார் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(06.04.2026) இடம்பெற்றுள்ளது.

பள்ளத்தில் விழுந்த வானில் உயிருக்கு போராடிய குடும்பம் - உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சிறுவன்

பள்ளத்தில் விழுந்த வானில் உயிருக்கு போராடிய குடும்பம் - உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சிறுவன்

மலையில் உச்சிக்கு சென்ற இளம்பெண்

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த 20 வயதான மாணவியான லூனா துகாட், அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிற மாணவர்களுடன் இலங்கைக்கு வருகைந்தந்து ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

அவர், கடந்த (05.04.2026) ஹட்டனின் பொன்னகர் வீதியில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அலுவலகத்தில் தனது சில நண்பர்களுடன் தங்கியிருந்து, சிங்கமலை சிகரத்தை நோக்கி ஒரு ஆராய்ச்சி திட்டத்திற்கு பயணம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று(06) காலையில் சிங்கமலை சிகரத்தைப் பார்க்கச் செல்வதாகக் கூறி சென்ற யுவதி, திரும்பி வருவதற்கான வழியைக் கண்டறிய மலை உச்சிக்குச் சென்றிருந்த போது அவரால் கீழே இறங்குவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மீட்பு நடவடிக்கை

அதன் பின்னர், இது குறித்து ஹட்டனில் உள்ள அரசு சாரா நிறுவன அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவரைப் பொறுப்பேற்றிருந்த ஹட்டன் பகுதி அதிகாரி ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஹட்டன் பொலிஸ் சிரேஷ்ட கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர மற்றும் ஹட்டன் தலைமையகத்தின் பிரதம ஆய்வாளர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில், ஹட்டன் பொலிஸ்ஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஒரு குழுவினர், சிங்கமலை வனப்பகுதி வழியாக மலை உச்சிக்குச் சென்று யுவதி அமர்ந்திருந்த இருப்பிடத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

ஹட்டன் வனப்பகுதியில் சிக்கிய வெளிநாட்டு யுவதி: விரைந்து செயல்பட்ட பொலிஸார் | Foreign Woman Trapped In Hatton Forest

மலை உச்சியில் ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்த அந்த யுவதியை பாதுகாப்பாக மீட்டு, பொலிஸார் கொண்டு சென்ற உணவுகளையும் கொடுத்து பாதுகாப்பாக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், காட்டுப் பகுதியிலிருந்து தன்னைக் காப்பாற்றியதற்காக ஹட்டன் பொலிஸாருக்கு குறித்த யுவதி நன்றி தெரிவித்துள்ளார்.  

இலங்கையர்கள் 5 பேர் டுபாயில் கைது - நாடு கடத்த நடவடிக்கை

இலங்கையர்கள் 5 பேர் டுபாயில் கைது - நாடு கடத்த நடவடிக்கை

ஹட்டன் வனப்பகுதியில் சிக்கிய வெளிநாட்டு யுவதி: விரைந்து செயல்பட்ட பொலிஸார் | Foreign Woman Trapped In Hatton Forest  

நாடாளுமன்றில் ஈஸ்டர் தாக்குதல் விவாதம்: நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடிவு!

நாடாளுமன்றில் ஈஸ்டர் தாக்குதல் விவாதம்: நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடிவு!

YOU MAY LIKE THIS VIDEO



5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US