யாழ்- நெடுந்தீவில் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது பதாதைகளை தாங்கியவாறு கோஷம் எழுப்பி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெடுந்தேவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வேண்டாம் வேண்டாம் எமக்கு சாவு வேண்டாம், எமது குடும்ப விளக்கை அணைத்து விடாதே! எனும் பதாதைகளைத் தாங்கி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு போராட்டம்
குறித்த மதுபான சாலைக்கு அருகில் 100 மீட்டர் தூரத்தில் பாடசாலை, கோவில்கள் என்பன அமைந்துள்ளதால் அப்பகுதிக்கு மதுபான சாலை அனுமதி வேண்டாம் என பொதுமக்கள் இதன் போது வலியுறுத்தினர்.
இது தொடர்பில் ஏற்கனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் மதுவரித் திணைக்களம் தற்காலிக அனுமதி வழங்கியது.
குறித்த அனுமதியை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் பிரதேச செயலகம் மற்றும் மது வரித் திணைக்களத்திற்கு இடையில் இன்று பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
எனவே அனுமதியினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ரசிகர்கள் கொண்டாடிய அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்.. என்ன தெரியுமா? Cineulagam

மூளை நோயால் பாதிக்கப்பட்ட போதிலும்.., 3-வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்ற IFS அதிகாரி News Lankasri

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam
