தீவகத்திற்கு வரும் புலம்பெயர் மக்களை அச்சமடைய செய்யும் அண்மைய கோர சம்பவங்கள்(Video)
நெடுந்தீவில் இடம்பெற்ற கோர சம்பவத்தால் பல புலம்பெயர் மக்கள் எமது தீவகத்தை நோக்கி வருவதற்கு அச்சப்படும் ஒரு நிலை உருவாக்கியுள்ளது என தீவக சிவில் சமூகத்தின் உப தலைவர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்மித்த 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமிற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த வீட்டிற்கு அருகாமையில் கடற்படை முகாம் இருந்தும் அங்கு இவ்வாறான ஒரு கொடூர சம்பவம் இடம்பெற்றிருப்பது தீவகத்தின் பாதுகாப்பற்ற தன்மையை உணர்த்துவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது கொடூர சம்பவம்
அதாவது குறித்த கடற்படை முகாம் கொலை இடம்பெற்ற வீட்டிற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. இது நெடுந்தீவின் பிரதான கடற்படை முகாம் என்பதுடன் சுமார் 300 கடற்படை வீரர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.
இருப்பினும் தீவக பகுதியில் இந்த மாதம் பதிவான இரண்டாவது கொடூர சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
அண்மையில் கனடாவிலிருந்து வருகை தந்த ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
மேலும் இந்த பகுதியில் பொதுவாக வெளிநாட்டவர்கள் தீவகத்திற்கு வருகை தந்து தங்குமிடங்களில் கொலை,கொள்ளை செய்வது தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.
மக்களின் சந்தேகம்
இவ்வாறு வெளிநாட்டவர்கள் தங்குமிடங்களில் பெறுமதியான பொருட்கள், பெருந்தொகை பணம் இருக்கும் என அவற்றை கொள்ளையிடவும் போதைபொருள் பாவனையில் ஈடுபடும் இளைஞர்கள் போதைவஸ்துக்களை பெறுவதற்கு பெருந்தொகை பணம் தேவையென அதற்காக இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நிலையும் உருவாகியுள்ளது.
உண்மையில் வடக்கில் பெருமளவான பாதுகாப்பு படையினர் இருக்கும் போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது,அவர்களுடைய ஒத்துழைப்பில் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகத்தையும் மக்கள் மத்தயில் எழுப்பியுள்ளது.”என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக உள்ளடக்கி வருகின்றது இந்த காணொளி,

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
