நெடுந்தீவு கொலையில் நீடிக்கும் மர்மம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்டமை தொடர்ந்தும் மர்மமாக உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பில் 03 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் விசாரணை
நேற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உயிரிழந்தவர்கள் 70 வயதுக்கு மேற்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சகோதரிகள், ஒருவரது கணவர் மற்றும் மற்றொரு உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த உறவினர்களில் ஒருவர் அந்த வீட்டுக்கு நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.