யாழ். நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (video)

Sri Lanka Police Jaffna Crime
By Theepan Apr 23, 2023 02:48 PM GMT
Report

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான வயோதிப பெண்மணிக்கு கடும் காயங்களை விளைவித்து, கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை 48 மணிநேர பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.

நெடுந்தீவில் நேற்று ஐவர் படுகொலை செய்ப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த வீட்டில் கடந்த இரு தினங்கள் தங்கியிருந்த 51 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையானவர்களின் நகைகள், கையடக்க தொலைபேசிகள் என உடமைகள் சில மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்திய பொலிஸார் 48 மணித்தியாலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட மன்று, 48 மணிநேர விசாரணையின் பின் மன்றில் மீண்டும் சந்தேகநபரை முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. 

முதலாம் இணைப்பு    

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாக கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, “குறித்த வயோதிபர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன். தனியாக நகைகளை கொள்ளையிட்டால் பிடித்துவிடுவார்கள் என நினைத்து, சம்பவத்தை திசை திருப்பவே அனைவரையும் கொலை செய்தேன்.

நான் நெடுந்தீவு வந்தால் குறித்த வயோதிபர்களின் வீட்டில்தான் தங்கிச் செல்வேன். அதுபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தேன். அங்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நகைகள் அணிந்திருந்தனர்.

பொலிஸ் குழுவினர் துரித விசாரணை

யாழ். நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (video) | Man Murdered Five Elderly People In Was Arrested  

அனைவரது நகைகளையும் அபகரித்து விற்பனை செய்து வரும் பணத்தில் கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன். அதனால் நேற்று அதிகாலை 4.30 பின்னர் நித்திரையிலிருந்த அனைவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க எண்ணினேன்.”என்று கைது செய்யப்பட்டவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை சந்தேகநபரிடமிருந்து 26 பவுண் தங்க நகைகள், ஆடைகள் மற்றும் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழ். நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (video) | Man Murdered Five Elderly People In Was Arrested

நேற்றையதினம்(22.04.2023) நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமிற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டன.

மேலும் 100 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.

யாழ். நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (video) | Man Murdered Five Elderly People In Was Arrested

பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு நேற்றுக் காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றிரவு கைது செய்தனர்.

குற்றவாளி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து அதிகளவு தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன. அதுதொடர்பில் விசாரணை மேற்கொண்ட போதே சந்தேகநபர் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

யாழ். நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (video) | Man Murdered Five Elderly People In Was Arrested

இதனை தொடர்ந்து சந்தேகநபரை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று ஏனைய சான்றுப்பொருள்களை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US