யாழில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் பலி
காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமுற்ற குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
சுதுமலை மத்தி, மானிப்பாயைச் சேர்ந்த நே.சர்வேந்திரன் வயது (45) என்பவரே படுகாயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
சிகிச்சை பலனின்றி பலி
தாவடியில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது காயமடைந்த நபர் மயக்கமடைந்து, வயிறு மற்றும் இடது கையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படாதபோதும் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri