கரவெட்டி பிரதேச சபையில் கறுப்பு துணி கட்டி சபைக்குள் பிரவேசித்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்

Jaffna chemmani mass graves jaffna
By Theepan Jul 24, 2025 10:59 AM GMT
Report

யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேசசபையின் அமர்வு இன்று (23) காலை 9 மணியளவில் தவிசாளர் கு.சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்தும், செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்கள், கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து மின் விளக்குகளை அணைத்து, மெழுகுவர்த்தி ஏந்தி ஏக உறுப்பினர்களும் நினைவேந்தினர். ஆளும் கட்சியான தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கையில் கறுப்பு துணி கட்டி சபைக்குள் பிரவேசித்தனர்.

இதன்போது செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்படுத்தும் விதமாக தவிசாளரால் முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டது.

பிரித்தானியாவில் பதுக்கப்பட்டுள்ள இலங்கையின் பெருமளவு கறுப்பு பணம்

பிரித்தானியாவில் பதுக்கப்பட்டுள்ள இலங்கையின் பெருமளவு கறுப்பு பணம்

முன்மொழிவுகள்

1) செம்மணியில் உள்ளிட்ட மனித புதைகுழி தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்பு கூறல் செயல் திட்ட அதிகாரிகள் தொழிநுட்ப ரீதியான உள்ளீட்டை வழங்கவும் கண்காணிப்பில் ஈடுபடவும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.

2) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 46/1 தீர்மானத்திற்கு அமைய இனப்படுகொலை யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் கீழியங்கும் இலங்கை பொறுப்பு கூறல் செயல் திட்ட அதிகாரிகளுக்கு தங்கு தடையற்ற வசதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும்.

கரவெட்டி பிரதேச சபையில் கறுப்பு துணி கட்டி சபைக்குள் பிரவேசித்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் | Karavetti South West Pradeshiya Sabha

3) மனித புதைகுழி அகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தமது சமூகத்தின் வளங்களை பெற்று அதன் மூலம் சுதந்திரமான தொழில்நுட்ப உள்ளீட்டை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமாறு அழுத்தம் வழங்கப்பட வேண்டும்.

4) புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றதால் கோரப்படும் அனைத்து நிதிக் கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

5) இதுவரை வெளிவந்த தகவல்களின் பிரகாரம் அனைத்து புதைகுழிகளிலும் சர்வதேச கண்காணிப்புடனான அகழ்விற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.

6) இலங்கையில் பொறுப்பு கூறல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஊடாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு விடயம் பாரபடுத்தப்பட்டு அதன் ஊடாக சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றை சாத்தியப்படுத்துவதற்கான வேலைப்பாட்டை ஐ.நா மனித உரிமை ஆணையாளர், எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் முடுக்கி விட வேண்டும் என தவிசாளர் முன்மொழிவை முன் வைத்தார்.

தமிழர்களை கொச்சைப்படுத்துவதில் ஜே.ஆரை சமன் செய்த அநுர அரசு!

தமிழர்களை கொச்சைப்படுத்துவதில் ஜே.ஆரை சமன் செய்த அநுர அரசு!

வழிமொழிவு

இதனை உறுப்பினர் கந்தன் பரஞ்சோதி வழி மொழிய சபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர் பா.அஜந்தன் தெரிவிக்கையில், மக்களின் கஷ்டங்கள் பற்றி கூறப்பட்டிருக்கிறது. இது பிரேரணையின் முதலாவதாக போட்டிருக்க வேண்டும்.

யாழ். மயிலிட்டியில் 6 கடற்றொழிலாளர்களுடன் சென்ற படகு மாயம்!

யாழ். மயிலிட்டியில் 6 கடற்றொழிலாளர்களுடன் சென்ற படகு மாயம்!

ஆனால் 18ஆவது பிரேரணையாக போட்டிருக்கின்றது. இதனை முதலாவது பிரேரணையாக கொண்டு வந்து பதிவு செய்யப்பட வேண்டும். நமது பிரதேச சபை ஆவணத்திலும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US