யாழில் சுகாதாரக் கற்கைகள் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்புக்களை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று ( 25.03.2024) நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீடத்தில் இருந்து ஆரம்பித்த போராட்டம் பலாலி வீதி ஊடாக பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை இடம்பெற்றுள்ளது.
மாணவர்களின் கோரிக்கை
இதன்போது, ”இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பில் அசமந்தமான போக்கினை உடன் நிறுத்தி, தரமான சேவையை மக்களுக்கு வழங்க, இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கு” என கோஷமிட்டபடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri