அதிர்ந்தது உக்ரைன்: மீண்டும் அதிரடி தாக்குதலை நடத்திய ரஷ்யா
ரஷ்யா 57 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் மூலம் உக்ரைனின் மேற்குப் பகுதியில் மீண்டுமொரு தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலை நேற்று (24.03.2024) அதிகாலை எல்விவ் பகுதியில் உள்ள முக்கியமான எரிசக்தி நிலையமொன்றின் மீது மேற்கொண்டுள்ளது.
இதன்போது, ஒரு ஏவுகணை போலந்து வான்வெளி ஊடாக உக்ரைனை நோக்கி ஏவப்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதல்
இரண்டு ஆண்டுகளுக்கும் தொடர்ந்து வரும் இப் போரில், உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி குண்டுவீச்சுகள் நடத்தப்பட்ட பின்னரே இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இத் தாக்குதலின் போது, அங்குள்ள உபகரணங்கள் தீப்பிடித்து எரிந்ததாக உக்ரைன் எரிசக்தி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், ரஸ்யாவின் 29 ஏவுகணைகளில் 18இனையும், 28 ட்ரோன்களில் 25இனையும் எதிர்த்துள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
இதன்போது, கீழே விழுந்த Kh-55 க்ரூஸ் ஏவுகணையின் பாகங்கள், கிய்வ் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, எல்விவ் பகுதியை நோக்கி ஏவப்பட்ட ரஷ்ய கப்பல் ஏவுகணை ஒன்று, போலந்தின் வான்வெளியை மீறியதாக போலந்தின் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.
போலந்து ஆதரவு
மேலும், ஒசெர்டோவ் நகருக்கு அருகில் உள்ள போலந்து விண்வெளியில் இந்த ஏவுகணை நுழைந்து 39 வினாடிகள் அங்கேயே இருந்துள்ளது.
இதனை இராணுவ ரேடார் அமைப்புகளால் கண்காணித்திருந்த நிலையில், போலந்தின் இராணுவ பேச்சாளர் ஜேசெக் கோரிஸ்ஸெவ்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஏவுகணை உக்ரைனுக்குத் செல்வதற்கு முன்பு போலந்து வான்வெளியில் சுமார் 2 கிமீ (1.2 மைல்) சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ரஷ்யாவிடமிருந்து இது தொடர்பில் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் போலந்து பாதுகாப்பு அமைச்சர் தமது நாடு இராணுவ ரீதியாகவும் மனிதாபிமான பக்கத்திலும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |