யாழ்.போதனா வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்ட தகவல்
யாழ். போதனா வைத்தியசாலையில் வீசப்பட்டிருந்த கரு பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக வீசப்பட்டிருக்கலாம் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் 22 ஆம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த கரு தொடர்பில் ஊடகங்களிடம் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கருச்சிதைவு
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த பெண் ஒருவர் கருச்சிதைவு ஏற்பட்ட
நிலையில் அதனை போதனா வைத்தியசாலையின் பாவனையற்ற மலசலகூடத்தொகுதியில் வீசி
இருக்கலாம் என நம்புகின்றோம்.
இந்நிலையில் மீட்கப்பட்ட கரு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரிடமும் குறித்த விடயம் தொடர்பில்
தெரிவித்துள்ளோம். அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
