யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உடுப்பிட்டி பகுதியில் வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, அந்த கம்பி பிரதான மின் இணைப்பு கேபிளுடன் தற்செயலாகப்பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது.
இதன் காரணமாக தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 27 வயதுடைய நிலக்காடு - காரைநகரை சேர்ந்த குமாரசாமி சுதன் எனும் ஒரு குழந்தையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
