புகையிரதத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட யுவதி!பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று(21.03.2023) பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து யுவதி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
பத்துலு ஓயா என்ற பகுதியில் வைத்தே 18 வயதுடைய குறித்த யுவதி புகையிரதத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு உயிரிழந்த யுவதி புத்தளம் கறிகட்டை பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.
மேற்படி யுவதி புகையிரதம் வருவதை அவதானித்து விட்டு தனது கைப்பையை எறிந்து விட்டு தண்டவாளத்தில் தலையை வைத்து கொண்டதாக அவதானித்தவர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு புகையிரதத்தில் பாய்ந்து அந்த யுவதி உயிரை மாய்த்துக்கொண்டமை பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
