யாழ். போதனா வைத்தியசாலையில் மூன்று மாதங்களுக்கு உட்பட்ட கருவின் சடலம் மீட்பு!
யாழ். போதனா வைத்தியசாலையின் கர்ப்பிணிகளுக்கான விடுதியில் இருந்து வீசப்பட்ட மூன்று மாதங்களுக்கு உட்பட்ட கருவின் சடலம் நேற்று மதியம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வைத்தியசாலையில் பாரிய குழப்பம் நிலவியதுடன் எவ்வாறு இந்த கரு வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருந்தது.
மூன்று மாதங்களுக்கு உட்பட்ட கரு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 22ஆம் இலக்க கர்ப்பிணிகளுக்கான விடுதியில் இருந்து வீசப்பட்ட கரு 10 ஆம் இலக்க விடுதியில் உள்ள நீர்குழாயில் உள்ள வெடிப்பு காரணமாக வெளியேறியுள்ளது.

மூன்று மாதங்களுக்குட்பட்ட கர்ப்பிணியின் கலைக்கப்பட்ட கருவாக இது இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருவதுடன் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரும் தனியான விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக
தெரியவருகிறது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 14 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan