சவால்களை எதிர்கொள்ள தயார்: சுகாதார துறை அதிகாரிகளிடம் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நம்பிக்கை
வடக்கு மாகாணத்தில்(Northern Province)சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்(P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (19.04.2024) நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சுகாதார சேவையிலுள்ள இடர்பாடுகள்
இதன்போது சுகாதார சேவையை முன்னெடுப்பதில், மாவட்ட ரீதியில் காணப்படும் இடர்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளால் ஆளுநருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சில பகுதிகளில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகவும், பௌதீக வளப் பற்றாக்குறை பாரிய சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து உரையாற்றிய ஆளுநர்,
நோயாளர்களின் உரிமைகளை பாதுகாத்து கரிசனையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் காணப்படுவதுடன் கொள்கைகளை பின்பற்றி அதிகாரிகள் செயற்பட வேண்டும்.
மத்திய அரசாங்கதிடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன்.

தரமான சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்து, அதனை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு அரச அதிகாரிகள் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 33 நிமிடங்கள் முன்
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan