யாழில் தென்னை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழில் தென்னை மரத்திலிருந்து விழுந்து, குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று முன் தினம் (09.10.2023) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசாரணை
இதன் போது யாழ். புத்தூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதையுடைய பொன்னுத்துரை கணேசலிங்கம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 6ஆம் திகதி, தென்னையில் சீவல் தொழில் செய்வதற்காக ஏறிய நிலையில் வழுக்கி கீழே விழுந்ததுள்ளார்.
இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் அவரது சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri

23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam
