கிளிநொச்சி - பூநகரி பகுதியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு: அதிகாரிகள் பாராமுகம்
பொன்னாவெளி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் போராடி வரும் நிலையிலும் அதற்கான எந்த தீர்வுகளும் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கிராமமான பொன்னாவெளி கிராமத்தில் சீமெந்து உற்பத்திக்கு தேவையான சுண்ணக்கல்லை அகழ்வது தொடர்பான ஆய்வுகள் கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
மக்கள் எதிர்ப்பு
இந்நிலையில், தற்போது சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் பொன்னாவெளி பகுதிகளை சேர்ந்த மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் வடமாகான ஆளுநர் மற்றும் மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகள் பொது அமைப்புகள் என 28க்கும் மேற்பட்ட மகஜர்களை கையளித்துள்ளனர்.
எனினும் இதுவரை உரிய அதிகாரிகளிடமிருந்து எந்த விதமான பதில்களும் கிடைக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பிரதேசத்தில் குறித்த சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அயல் கிராமங்களான கிராஞ்சி வலைப்பாடு வேரவில் ஆகிய பகுதிகளில் மக்கள் வாழ முடியாத ஒரு சூழல் ஏற்படும்.
ஆகவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள்
நடவடிக்கை எடுத்து தமக்கான ஒரு நிரந்தரமான நியாயபூர்வமான தீர்வை தர வேண்டும்
என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
