யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த வயோதிபர்: பொலிஸார் விசாரணை
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் இருந்தே குறித்த சடலம் நேற்று(01.08.2023) செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஆலய வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் ஒரு அறையில் உயிரிழந்த வயோதிபர் தனிமையில் தங்கியிருந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
அவர் குறித்த ஆலயத்தில் பணி புரிந்தும் வந்துள்ளார். இந்நிலையில் வழமையான அவருடைய நடமாட்டம் இல்லாத நிலையில், அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புக்கான காரணம் குறித்து தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |