இந்திய வர்த்தக் குழு யாழ்ப்பாணம் வருகை - முதலீடுகள் தொடர்பில் ஆராய்வு (Photos)
இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் பி.எச்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் இன்று (31.07.2023) திங்கட்கிழமை இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட புவியியல் மற்றும் வர்த்தக இணைப்புக்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்களில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் பல துறை பிரதிநிதிகள், மரபுசார் துறைகளில் நிபுணர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை உள்ளடங்கியுள்ளது.
முதலீடு செய்ய சாத்தியக்கூறு ஆராய்வு
இதன்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தளபாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு கப்பல் போக்குவரத்து, நீர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகிய பகுதிகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயப்பட்டன.
மேலும், இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடனான நெருக்கமான ஒத்துழைப்பு, இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீள உதவும் அதே வேளையில் பகிரப்பட்ட செழிப்பை உறுதி செய்யும் என ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பால் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
வடமாகாணத்திற்கான தமது 3 நாள் விஜயத்தின் போது சம்பந்தப்பட்ட முதலீட்டுத் தளங்களையும் பார்வையிடும் அதேவேளை, வடமாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களைச் சந்திப்பதற்கும் தூதுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
