யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சிறுவர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 2ஆவது காலாண்டுக்குரிய குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டம், நேற்று (22) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட பதில் அரசாங்க அதிபர், பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கப்பெறும் சிறுவர் முறைப்பாடுகள் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கூறியுள்ளார்.
அதிகாரிகளுக்கு அறிவுறத்தல்
அத்துடன், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர், பெண்கள், முதியோா் தொடர்பான உத்தியோகத்தர்கள் மேற்படி வகுதியினர் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடி ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னதாக மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிடுமாறும் தெரிவித்திருந்தார்.
மேலும், பாடசாலை இடை விலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடுகள், சிறுவர் துஸ்பிரயோகம், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக் கொடுத்தல் , பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் முறைப்பாடுகள், பிரதேச மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் , பாடசாலை பேருந்து சேவை போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் , உதவி பிரதேச செயலாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
