காரணமின்றி இளைஞனை தாக்கிய மருதங்கேணி பொலிஸார்
யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸார் காரணமின்றி இளைஞன் ஒருவரை தாக்கியது போன்ற ஒரு காணொளி வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியை தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞனே பதிவு செய்துள்ளார்.
இளைஞன் தனது வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த போது இடைமறித்த பொலிஸார், அவரை விசாரித்துள்ளனர்.
இதனையடுத்தே, காரணம் எதுவுமின்றி பொலிஸார் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இளைஞன்
இதன்போது, தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் ஏன் என் மீது தாக்குதல் நடத்தினீர்கள் என இளைஞன் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு நான் உங்களை தாக்கவில்லை என பொலிஸார் பதிலளிக்கின்றனர். எனினும், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறும் இளைஞன், அதனால் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் முச்சக்கர வண்டியில் ஏறி அந்த இடத்திலிருந்து சென்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 18 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri