இளைஞர்களை ஏமாற்றி 1000 கோடி ரூபாய் மோசடி செய்த பெண்
கண்டி, பிலிமத்தலாவை பகுதியிலுள்ள புரோகெயார் தனியார் பிரமிட் நிறுவனத்தின் இயக்குநரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து சுமார் 1000 கோடி ரூபாயை இந்த பெண் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிதி மோசடி
குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இலங்கை மத்திய வங்கி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
ஓட்டுநர் வேலைகள் முதல் உயர் மட்டத் தொழில்களை வெளிநாடுகளில் பெற்றுத்தருவதாக பெருமளவு இளைஞர், யுவதிகளை ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam