விமானத்தில் மோசமாக செயற்பட்ட யாழ். நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்ணை தகாத முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் இலங்கையரான கப்பல் மாலுமியை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று உத்தரவிட்டார்.
விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசபாபதி குஷாந்தன் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
டுபாயில் இருந்து திரும்பும் போது தென்னாபிரிக்காவைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்ணை சந்தேக நபர், தகாத முறையில் துன்புறுத்தியதாக விமான நிலைய பொலிஸார் நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.
விளக்கமறியல்
இந்த நிலையில் சர்வதேச அளவில் அவதூறு ஏற்படுத்திய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தகவல்களை பரிசீலித்த பின்னர், சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்த நீதவான், வழக்கை 5 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என நீதவான் தனுஜா லக்மாலி குறிப்பிட்டுள்ளார்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
