யாழில் பிடிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி திருடன்: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற பல்வேறு துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு சம்பவத்தினை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினரால் முறியடிப்பு செய்துள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குருநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களிடம் வேண்டுகோள்
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, ஹெரோயின் மற்றும் துவிச்சக்கர வண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவரினால் 2 3 மாதங்களாக நல்லூர், யாழ்நகரபகுதி, கே கே ஸ் வீதி போன்ற இடங்களிலிருந்து திருடப்பட்ட ஆண்கள் பயன்படுத்தும் ஐந்து துவிச்சக்கர வண்டிகளும் 11 பெண்கள் உபயோகிக்கும் துவிச்சக்கர வண்டிகளும் அடங்கலாக 16 துவிச்சக்கர வண்டிகளை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி துவிச் சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் இருப்பின் தகுந்த அடையாளங்களை காண்பித்து துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
